ஆற்றில் மணல் கொள்ளை: திமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு புகார்

திண்டுக்கல் அருகே இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெறுவது குறித்து அரசு அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக முன்னாள் அமைச்சர் ஐ பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே திருகம்பட்டி கிராமம் உள்ளது. ஊரின் அருகே சந்தனவர்த்தினி என்ற ஆறு செல்கிறது. தற்போது பெய்த மழையின் காரணமாக ஆற்றில் மணல் சேர்ந்துள்ளது இதனை மணல் மாபியா கும்பல் ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரிகளை கொண்டு அரசு அனுமதி பெறாமல் மணல் அள்ளி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகமும் மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த தகவல் அறிந்த திமுக முன்னாள் அமைச்சர் ஐ பெரியசாமி மணல் மாபியா கும்பலை பிடிக்க சம்பவ இடத்திற்கு நேரில் சென்றார்.

இதனையடுத்து , முன்னாள் அமைச்சர் ஐ பெரியசாமி வரும் தகவல் அறிந்த மணல் கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தபோது 50 அடி ஆழத்திற்கு மண் அள்ளி இருப்பது தெரியவந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெரியசாமி: " சந்தனவர்த்தினி ஆற்றின் அரசு அனுமதி இல்லாமல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உதவியுடன் மணல் திருட்டுத்தனமாக அள்ளுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் திமுக அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்" என தெரிவித்தார்.

TMK-Administrator-murder-by-sand-robberers

 

More News >>