மேகதாது: கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்

மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்கே இடம் இல்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது.

மேகதாது தொடர்பாக விவாதிக்க இன்று சிறப்பு சட்டசபை கூடுகிறது. இந்நிலையில் மேகதாது குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடகா அமைச்சர் சிவகுமார் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், கர்நாடகா அரசுடன் பேச்சுவார்த்தை என்பதற்கே இடம் இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

 

More News >>