முதலாவது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியாவுடன் மல்லுகட்டிய இந்திய அணி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி மல்லுக்கட்டி 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதன் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இந்திய அணி ரன் எடுக்க முடியாமல் திணறியது. இதில், ராகுல் 2, முரளி விஜய் 11, கேப்டன் கோலி 3, ரஹானே 13 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டத்தை இழந்தனர். இந்திய அணி 41 ரன்கள் எடுக்கவே முட்டி மோதியது.
உணவு இடைவேளையின்போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்களை எடுத்தது. பின்னர், விளையாடிய புஜாரா சதம் அடித்து 123 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் ஹாசில்வுட் 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இன்றைய ஆட்டத்தின் முடிவில், இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்தது.