தமிழகத்தின் 3 வேகவளர்ச்சி நகரங்கள்: உலக அளவில் ஓர் ஆய்வு
உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் குறித்து ஆக்ஸ்போர்டின் தலைமை உலகளாவிய நகரங்கள் ஆராய்ச்சி பிரிவு ஆய்வு செய்துள்ளதில் முதல் பத்து இடத்தை இந்தியா பிடித்துள்ளது. அதில் தமிழகத்தின் 3 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் 2018-ம் ஆண்டு முதல் 2035 ஆண்டுக்குள் அதிகமான வளர்ச்சி அடைய வாய்ப்பு நகரங்கள் குறித்த விரிவான ஆய்வில் நியூயார்க் முதலிடத்திலும், டோக்கியோ இரண்டாவது இடத்திலும், லாஸ் ஏஞ்சல்ஸ் 3வது இடத்திலும், லண்டன் 4வது இடத்திலும் உள்ளது.
இதைத் தொடர்ந்து 5வது இடத்தில் உள்ள ஷாங்காய், 6வது இடத்தில் உள்ள பெய்ஜிங் நகரங்களின் வளர்ச்சி ஓரளவு மட்டுமே இருக்கும். 7வது இடத்தில் உள்ள பாரிஸ் மற்றும் 8வது இடத்தில் உள்ள சிகாகோ நகரங்களின் வளர்ச்சி விகிதம் சரிவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 2035ம் ஆண்டுக்குள் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இதில் தமிழகத்தின் 3 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த பட்டியலின் முதல் இடத்தில் சூரத், இதைத் தொடர்ந்து ஆக்ரா, பெங்களூரு, ஹைதராபாத், நாக்பூர், 6 வது இடத்தில் தமிழகத்தின் திருப்பூர் நகரம் உள்ளது.
அதைத் தொடர்ந்து ராஜ்கோட், 8வது இடத்தில் தமிழகத்தின் திருச்சி, 9வது இடத்தில் தமிழகத்தின் சென்னை, இறுதியாக விஜயவாடா இடம்பெற்றுள்ளது.