கலிபோர்னியாவில் படமாகும் விஜய் 63!

ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கயிருக்கும் படத்திற்கான லொக்கேஷன் பார்பதற்காக கலிபோர்னியா சென்றுள்ளார் இயக்குனர் அட்லி.

சர்காரில் ஒரு கலக்கு கலக்கி முடித்த விஜய் தற்போது தனது 63 வது படத்தை நடிக்கவிருக்கிறார். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு புரட்சி செய்ய அட்லி விஜய் கூட்டணி இணைந்துள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா மற்றும் காமெடிக்கு விவேக் யோகிபாபு நடிக்கின்றனர். இந்த படத்தை கல்பாத்தி எஸ். அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்   இசையமைக்க , ஜி.கே.விஷ்ணு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் தற்போது கலிபோர்னியாவில் லொகேஷன் பார்பதற்காக இயக்குநர் அட்லி சென்றுள்ளார்.  படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் இங்கு படமாக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தகவலை  உறுதிப்படுத்தும் வகையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ, அர்ச்சனா கல்பாத்தி ஒரு புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

More News >>