ஜீவா படத்திற்கு கீ கொடுத்த விஜய்சேதுபதி!
ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கவுள்ள படத்தை நடிகர் விஜய்சேதுபதி தொடங்கிவைத்தார்.
கீ, கொரில்லா, ஜிப்ஸி போன்ற படங்களில் பிசியாக இருக்கிறார் ஜீவா. தற்போது அவர் றெக்க பட இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் தனது அடுத்த படத்தை நடிக்கவுள்ளார்.
ஏற்கனவே இவர் நடித்து முடித்த படங்கள் ரிலீசுக்கு வரிசைக் கட்டிக்கொண்டு நிற்கும் நிலையில், மேலும் தனது அடுத்தடுத்த படங்களை நடித்துக்கொண்டே இருக்கிறார்.
மேலும் இந்த படத்தை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி துவங்கி வைத்தார். றெக்க படத்தின் மூலம் விஜய்சேதுபதியும் ரத்னசிவாவும் நெருங்கிய நண்பர்கள் ஆனவர்கள். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் தயாரித்துள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்திலேயே வெளியாக வேண்டிய கீ படத்திற்கு யார் எப்போ கீ கொடுக்க போகிறார்களோ? தெரியவில்லை. ப்ளூவேல் போன்ற ஆபத்தான விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கீ படத்தின் டிரைலர் வெளியாகி வைரலான நிலையில், படம் மட்டும் இன்னும் ரிலீசாகவில்லை. விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.