ஒரு கோடி பார்வைகளை பெற்ற ரெளடி பேபி!
தனுஷ் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவான ரெளடி பேபி பாடல் 1 கோடி பார்வையை தாண்டியுள்ளது.
தனுஷ் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி சேர்ந்தாலே அந்த படத்தின் பாடல்கள் ஹிட் தான். அந்த படங்களின் பாடல்களை இன்றும் அனைவரும் கேட்டு ரசிக்கின்றனர்.
அனிருத்தின் வருகையால், 10 வருடமாக சேராமல் இருந்த இந்த கூட்டணி இப்போது மாரி 2 படம் மூலம் மீண்டும் சேர்ந்துள்ளது. தனுஷ் யுவன் கூட்டணியில் உருவான ரெளடி பேபி பாடல் யூடியூபில் 1 கோடி பார்வைகளை தாண்டியுள்ளது.
அனிருத் தனுஷ் கூட்டணியின் வெளியான ஒய் திஸ் கொலவெறி மற்றும் மாரி முதல் பாகத்தில் வெளியான டான் டான் டான். பாடல்கள் 10 கோடிக்கும் மேல் பார்வையாளர்களை பெற்று அசத்தியது.
ஆனால், முதன்முதலாக, யுவன் தனுஷ் கூட்டணியில் வெளியான சில நாட்களில் 1 கோடி பேர் பார்த்து ரசித்த முதல் பாடல் இதுவாகும். மேலும் நேற்று வெளியான மாரி 2 படத்தின் டிரைலரும் ஒரே நாளில் ஒரு கோடி ஹிட்ஸ்களை தாண்டி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.