முதல் பந்திலேயே முகமது ஷமி அவுட் ஆஸி., வீரர் ஆரோன் ஃபின்ச்சும் டக் அவுட்!

முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 2-ம் நாள் ஆட்ட தொடக்கத்தில் முதல் பந்திலேயே முகமது ஷமியும் அவுட்டானார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்  தொடரில்  இந்திய அணி, டி-20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

அடிலெய்டில் நேற்று முதல் டெஸ்ட் தொடர் தொடங்கியது.டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால், புஜாராவை தவிர இந்திய வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் குறைந்த பட்ச ரன்களுடன் பெவிலியன் திரும்பினர்.

ம பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா(37), ரிஷப் பந்த் மற்றும் அஸ்வின் தலா 25 ரன்களை எடுத்தால் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 250 ரன்களை எட்டியது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் பந்திலேயே முகமது ஷமி விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 250 என்ற அளவிலேயே அடங்கியது.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. அதிரடி ஆட்டக்காரர் ஆரோன் ஃபின்ச்சை முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்கவிடாமல் இஷாந்த் சர்மா டக் அவுட் ஆக்கினார். 

தற்போது மர்கஸ் ஹாரிஸ் மற்றும் உஸ்மான் கவாஜா தலா 9 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். 8 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 18 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.

இந்திய பந்துவீச்சாளர்கள் திறம்பட செயல்பட்டால் தான், இந்தியா பக்கம் வெற்றி திரும்ப வாய்ப்பிருக்கிறது.

More News >>