ரன்பீர் கபூருடன் பிரேக் அப் - மனம் திறந்த கத்ரீனா கைஃப்!
ஆறு ஆண்டு காலமாக காதலித்து வந்த ரன்பீர் கபூருடன் தனக்கு பிரேக் ஆப் ஆனதாக கத்ரீனா கைஃப் தெரிவித்துள்ளார்.
ஷாரூக்கான் நடிப்பில், கத்ரீனா கைஃப், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகி உள்ள ஜீரோ படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் ஷாரூக்கான் குள்ளனாக நடித்துள்ளார். அனுஷ்கா சர்மா மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் நினைவுப் படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பாலிவுட் நடிகை பபிதா குமாரி என்ற கதாபாத்திரத்தில் கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஜீரோ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், இதுபோன்ற கதாபாத்திரத்தில் இனிமேல் தன்னால் நடிக்க முடியாது என்றும், அந்த கதாபாத்திரம் மனதளவில் தன்னை மிகவும் பாதித்ததாகவும், கத்ரீனா தெரிவித்தார்.
மேலும், தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய இரு முன்னணி நடிகைகளுக்கும் கடந்த மாதம் திருமணம் ஆகிவிட்டதே, தங்களுக்கு எப்போது என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, விடையளித்த கத்ரீனா, “எனக்கு மேரேஜ் ஒர்க்கவுட் ஆகல, ஆறு ஆண்டுகளாக ரன்பீருடன் ஏற்பட்டு வந்த காதல் பிரேக் அப் ஆனது. இதற்காக நான் வருந்தவில்லை. இது என்னுடைய சினிமா வாழ்க்கையில் முன்னேற உத்வேகத்தையே அளித்துள்ளது’ எனக் கூறியுள்ளார்.