மீண்டும் மந்திர கோலுடன் வலம் வரும் ராஜபக்சே- பில்லி சூனியத்தால் பெரும் பீதி!
கேரளா நம்பூதிரிகள் கொழும்பில் மகிந்த ராஜபக்சேவின் மாளிகையில் விடிய விடிய பூஜைகள் நடத்தியிருப்பதும் இதனைத் தொடர்ந்து மந்திரகோலை கையில் பிடித்தபடி ராஜபக்சே வலம் வருவதும் தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம் பீதியை கிளப்பியுள்ளது.
இலங்கை அதிபராக இருந்த காலத்தில் கையில் மந்திர கோலுடன் வலம் வந்தார் மகிந்த ராஜபக்சே. கேரளா நம்பூதிரிகள் மந்திரித்து கொடுத்ததாம் இந்த மந்திரகோல்.
அரசியல் ஆடுகளத்தில் அடுத்தடுத்து வெற்றிகளை தாம் பெற இந்த மந்திர கோலை ராஜபக்சே பெரிதும் நம்பியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டு அது தொடர்பான குழப்பம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
இதனிடையே கொழும்பில் மகிந்தவின் மாளிகையில் விடிய விடிய கேரளா நம்பூதிரிகள் பூஜையை நடத்தியிருக்கின்றனர். இந்த பூஜைக்குப் பின்னர் இப்போது மீண்டும் மந்திரகோலுடன் ராஜபக்சே வலம் வர தொடங்கியிருக்கிறார்.
ராஜபக்சேவின் கையில் உள்ள மந்திர கோல் தென்னிலங்கை அரசியல்வாதிகளை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.