திமுக கூட்டணிக்கு வேட்டு வைக்கும் எடப்பாடியின் ஸ்லீப்பர் செல்கள் வைகோ-திருமாவளவன்?

உடையும் திமுக கூட்டணி- வைகோவுக்கு நோஸ்கட் கொடுத்த ஸ்டாலின்! எடப்பாடி பக்கம் தாவும் திருமாவளவன்! Exclusive

விடுதலைப் புலிகளை உறுதியாக ஆதரிக்கும் வைகோ, திருமாவளவன் இருவரும் தேர்தல் களத்தில் ஒவ்வொருமுறையும் ‘நம்பிக்கை’க்கு உரியவர்களாக இல்லாமல் மாறி மாறி நிலைப்பாடு எடுக்கும் வழக்கம் இம்முறையும் தொடர வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.

கடந்த தேர்தலில் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என ஊர் ஊராக பிரசாரம் செய்தார் வைகோ. அவர் உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணியே திமுகவின் வெற்றி வாய்ப்பைத் தடுக்க உருவாக்கப்பட்ட அதிமுகவின் பி டீம் என விமர்சிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஊடகங்கள் அப்போது வைகோவிடம் கேள்வி கேட்டபோது கோபத்தைத்தான் காட்டினார். தற்போது ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓயமாட்டேன் என பிரசாரம் செய்து வருகிறார் வைகோ.

அதேநேரத்தில் திமுக கூட்டணியில் இடம்பெறக் கூடிய விடுதலைச் சிறுத்தைகள், அதே கூட்டணியில் இருக்கும் மதிமுக பொதுச்செயலர் வைகோவை ‘தத்துவார்த்த’ ரீதியாக விமர்சிக்கப் போய் இப்போது அது பூதாகரமாகி உள்ளது. சர்ச்சைக்குரிய வன்னி அரசுவின் பதிவு நீக்கப்பட்ட பின்னரும் வைகோவும் திருமாவளவனும் கடுமையான சொற்களால் மோதிக் கொள்வது என்பது செயற்கைத்தனமாகவே தெரிகிறது.

தாங்கள் இப்படி மோதிக் கொள்வது திமுக கூட்டணி மீதான பிம்பத்தை சிதைக்கும் என்பதை புரியாதவர்கள் அல்ல இருவரும். இருந்தபோதும் இப்போதும் தொடர்ந்து இருதரப்பும் வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டிருப்பது என்பது உள்நோக்கத்துடன் இருவரும் செயல்படுகிறார்களோ? என்கிற சந்தேகத்தை அறிவாலய வட்டாரங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக கூட்டணியில் தாங்கள் கேட்ட சீட் கிடைக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவுவதற்கு திருமாவளவன் தயாராக இருக்கிறார் என்பதை நாம் ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். அதேபோல் தமக்கு ராஜ்யசபா சீட் தராவிட்டால் வைகோவும் அணி தாவ தயாராக இருக்கிறார் என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தோம்.

தற்போது தொழிலதிபர் ஒருவர் மூலம் வைகோவுடன் எடப்பாடி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி முடித்துவிட்டது; இதையடுத்தே திருமாவும் வைகோவும் திமுக கூட்டணிக்கு வேட்டு வைத்தாக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவதாக கூறப்படுகிறது.

 

More News >>