இலவசமாக குழந்தை பெற்றுக் கொடுத்த பெண் ...ஜூலியோவின் கருவை சுமந்த மரிசா!
கனடா பெண்மணி மரிஸா ஸ்பெயின் தம்பதியினரான ஜீசஸ்ஜூலியோவுக்கு இலவசமாக குழந்தை பெற்று தந்ததால் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
குழந்தை பெற முடியாதவர்களின் கருமுட்டையை செயற்கையாக இணையச் செய்து, இன்னொருவர் வயிற்ரில் வளரச் செய்வது 'வாடகைத்தாய்' முறை எனப்படும்.
இப்படி குழந்தை பெற்றுக் கொடுப்பவர்கள், அந்த பணிக்காக பணம் பெற்றுக் கொள்வார்கள். கனடாவில் இவ்வாறு செய்வது சட்ட விரோதமாகும்.
இந்த நிலையில் குழந்தை பெற வாய்ப்பு இல்லாத ஜீசஸ் - ஜூலியோ தம்பதியருக்கு உதவி செய்ய முடிவெடுத்தார் மரிசா. கனடாவில் 'வாடகைத்தாய்' முறைதான் சட்ட விரோதம். இலவசமாக உதவுவதில் தவறில்லை.
எனவே 9 மாதங்கள் பிறரின் கருவை தனது வயிற்றில் சுமந்தார் மரிசா. மேலும் 16 மணி நேரம் பிரசவ வலியைத் தாங்கி அழகிய குழந்தையை பெற்றெடுத்தார். இப்போது ஜீசசும், ஜூலியோவும் பெற்றோராகியுள்ளனர்.
Airplane-crashed-in-Canada-one-dead