வன்னியர், கவுண்டர் பெண்ணை காதலிப்போம்.. சமூக பதற்றத்தை உருவாக்கும் வீடியோ வைரல்
அம்பேத்கர் நினைவுநாளில் சில இளைஞர்கள் முழக்கம் எழுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட சில சமூகங்களை உசுப்பிவிடும் வகையில் உள்ள இந்த வீடியோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஜாதி ஆணவக் கொலைகள் தொடருகின்றன. ஆணவக் கொலைகளுக்கு எதிரான குரல்கள் உரத்து கேட்டபோதும் ஜாதி வெறி அடங்கியதாக இல்லை.
இந்நிலையில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்த வந்த கூட்டம் ஒன்று எழுப்பிய முழக்கங்கள் சர்ச்சைக்குரியதாக வெடித்திருக்கிறது.
காதலிப்போம் காதலிப்போம் கவுண்டர் பெண்ணை காதலிப்போம்
காதலிப்போம் காதலிப்போம் வன்னியர் பெண்ணை காதலிப்போம்
என நீள்கின்றன இந்த முழக்கங்கள்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இப்படி முழக்கம் எழுப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.