திமுக கூட்டணியில் 6 சீட்- ஒப்புதல் தெரிவித்த சசிகலா? ஒப்பாரி வைக்கும் தினகரன்- அம்போவாகும் அமமுக!! Exclusive

திமுக கூட்டணிக்குள் தினகரன் போவார் என எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் ஆளும்கட்சி பொறுப்பாளர்கள். சிறையில் இருக்கும் சசிகலா மூலமாக இதற்கான தூது முயற்சிகள் தொடங்கிவிட்டதாகவும் பேசத் தொடங்கியுள்ளனர்.

அதிமுகவைக் கைப்பற்றுவார் தினகரன் எனக் காத்திருந்த கட்சி நிர்வாகிகள் சிலர், இப்போதும் அந்த நம்பிக்கையைக் கைவிடவில்லை. ஆர்கே.நகர் வெற்றிக்குப் பிறகு தனிப்பட்ட செல்வாக்கில் நகர்வலம் வந்து கொண்டிருக்கிறார் தினகரன்.

கட்சி அதிகாரத்தை மீண்டும் சசிகலாவுக்கு விட்டுக் கொடுக்கும் முடிவில் எடப்பாடி பழனிசாமி இல்லை என்பதை அறிந்த பிறகுதான், கருணாஸை விட்டுப் பேச வைத்தார் சசிகலா.

அவரும், 'எடப்பாடியை சி.எம் ஆக்குனது யாரு. முதல்வர் பதவியை கவுண்டர் சமுதாயத்துக்குக் கொடுத்தது சின்னம்மா. அவர் போட்ட பிச்சையில்தான் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்.

இவர்களால் ஒரு பைசா கூட நான் ஆதாயம் பெறவில்லை. விசுவாசத்துக்காக சின்னம்மாவிடம் இருக்கிறேன்' என வள்ளுவர் கோட்டத்தில் பேசினார். இந்தப் பேச்சால் கோபப்பட்ட எடப்பாடி பழனிசாமி, கருணாஸ் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

'வழக்கு வரும், ஜெயில் வரும், பெயில் வரும்' என மனம் தளராமல் இருக்கிறார் கருணாஸ். இந்தப் பேச்சின் மூலமாக சமூகத்திலும் தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்துக் கொண்டார் கருணாஸ்.

இந்த நிலையில் தினகரனின் செல்வாக்கை உடைக்கப் பலவகையிலும் முயற்சி செய்து வருகிறார் எடப்பாடி. எதுவும் சாத்தியமாகவில்லை. எனவே, அடுத்தகட்டமாக சில வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள் சசிகலா குடும்பத்தினர்.

அதாவது, 'தமிழ்நாடு முழுக்க ஒரு போராட்டத்தைக்கூட தினகரனால் நடத்த முடியாது. டெல்டா உள்பட ஒரு சில தென்மாவட்டங்களில்தான் அமமுகவுக்கு செல்வாக்கு. இப்படியே தேர்தலை எதிர்கொண்டால் தோல்விதான் கிடைக்கும்.

ஆதலால், திமுக அணியில் ஆறு சீட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். அவர்களுக்கும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள். கண்டிப்பாக காங்கிரஸ்தான் வெற்றி பெறும். ராகுல் வந்துவிட்டால் சிறையில் இருந்தும் வந்துவிடலாம். இரட்டை இலையும் கிடைத்துவிடும்' என சசிகலாவிடம் சிலர் தூது சென்றுள்ளனர்.

அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாக ஐ.எஸ் அதிகாரிகள் பேசத் தொடங்கியுள்ளனர். இந்த முயற்சிக்கு தினகரன் மறுப்பு தெரிவித்துவிட்டாராம். இருப்பினும், சசிகலா முடிவில் மாற்றம் இருக்காது எனவும் பேசத் தொடங்கியுள்ளனர்.இதனால் அமமுகவின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துவிட்டது என்கின்றனர் அக்கட்சியினர்.

-அருள் திலீபன்

More News >>