ஒலி வடிவில் ஆங்கில செய்திகள் - கூகுள் அசிஸ்டெண்ட் தருகிறது

கூகுள் நிறுவனம், முன்னணி செய்தி நிறுவனங்களுடன் இணைந்து கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் செய்திகளை ஒலி வடிவில் (Auido News) வாசகர்களுக்கு அளிக்கிறது.

செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) பயன்படுத்தி ஒலி வடிவில் செய்தியை தருவதற்கான முன்னோட்டத்தை கடந்த ஓராண்டாக கூகுள் நிறுவனம் பரிசோதித்து வருகிறது. சிஎன்பிசி, ஹாலிவுட் ரிப்போர்ட்டர், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் சௌத் சைனா மார்னிங் போஸ்ட் போன்ற முன்னணி செய்தி நிறுவனங்களுடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

"வாசகர்களின் விருப்பத்திற்கேற்ப செய்திகளின் சுருக்கம் அளிக்கப்படும். தேவையானால் முழுமையான செய்திகளும் ஒலி வடிவில் கிடைக்கும்," என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட செய்தியை கடந்து செல்லுமாறு அல்லது நிறுத்துமாறு அல்லது பின்னோக்கி செல்லுமாறு கூகுள் அசிஸ்டெண்ட்டுக்கு கட்டளைகள் தரலாம்.

கூகுள் செய்திகள் பிரிவின் முயற்சி இது. கூகுள் அசிஸ்டெண்ட் மூலமாக வழங்கப்படும் ஒலி வடிவ செய்தி, முதலில் குறைந்த எண்ணிக்கையில் அமெரிக்க ஆங்கிலத்தில் கொடுக்கப்படும். உலகமெங்கும் ஆங்கிலத்தில் செய்தி தருகிற நிறுவனங்கள் இந்த முயற்சியில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>