2018 ட்விட்டர் ஹேஷ்டேக்கில் சர்கார் செய்த விஜய்!
ரஜினியின் 2.0 ரிலீஸ் ஆகி ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்தும், ட்விட்டரில் இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட தமிழ் நடிகர் விஜய் தான்.
இந்தியாவில் இந்த ஆண்டு ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட டாப் 10 பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதலிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இடம் பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் நடிகர் விஜய்க்கு இந்திய அளவில் 8வது இடம் கிடைத்துள்ளது. விஜய்க்கு முன்னதாக ஷாருக்கான் 7வது இடத்தையும், பவன் கல்யாண் 6வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மேலும், ட்விட்டர் ஹேஷ்டேக் 2018 பட்டியலில் விஜய்யின் சர்கார் படத்தின் #sarkar முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் அஜித்தின் விஸ்வாசம் ஹேஸ்டேக்கும் இந்தியாவையே உலுக்கிய #MeToo 8வது இடத்தையும் பிடித்துள்ளன.
மேலும், செல்வாக்கு மிக்க அதிக பாப்புலரான ஹேஷ்டேகாகவும், விஜய்யின் #Sarkar முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 2ம் இடத்தில் #MeTooவும் 6ம் இடத்தில் #JusticeForAsifaம் இடம்பிடித்துள்ளன.
விஸ்வாசம் படத்தின் ஹேஷ்டேகை பின்னுக்கு தள்ளி விஜய்யின் சர்கார் ஹேஷ்டேக் முதலிடத்தில் உள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.