வன்னியர், கவுண்டர் பெண்களுக்கு எதிரான முழக்கம்- பாமகவினரின் திட்டமிட்ட அவதூறு: விசிக
வன்னியர், கவுண்டர் பெண்ணை காதலிப்போம்.. சமூக பதற்றத்தை உருவாக்கும் வீடியோ 'வைரல்’வன்னியர், கவுண்டர் பெண்களுக்கு எதிரான முழக்கங்களுடன் வெளியான வீடியோ பாமகவினரிடன் திட்டமிட்ட அவதூறு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு முன் நின்றுகொண்டு ஒருவர் பெண்களை அவமதிக்கும் வகையில் முழக்கமிட்டுள்ளார். தலித் அல்லாத சமூகத்தினரை காயப்படுத்தும் வகையில் அவர் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அவருடைய அந்த நடவடிக்கையில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு துளியளவும் தொடர்பும் இல்லை. அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சார்ந்தவரும் இல்லை.
திடீரென எந்த ஆதாரமும் இல்லாமல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சார்ந்தவர் என்று அவர்மீது பாமகவினர் புகார் செய்திருப்பது உள்நோக்கம் கொண்ட செயலாகும்.
எமது கட்சியின் பெயரைக் கெடுக்கவும் எமது தலைவரின் மீதான நன்மதிப்பைக் கெடுக்கவும் வேண்டுமென்றே இவ்வாறு புகார் அளித்துள்ளனர். திட்டமிட்ட உள்நோக்கத்துடன் இவ்வாறு அவதூறு பரப்புவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பாமகவினரின் இந்த அவதூறினைப் பொதுமக்கள் நம்ப வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். வீடியோ விவரம்: