தலித் கட்சிகள் இணைந்து கூட்டணி: இயக்குநர் பா. ரஞ்சித் யோசனைக்கு திருமாவளவன் கடும் எதிர்ப்பு
தலித் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் யோசனைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஞ்சித், அனைத்து தலித் இயக்கங்கள், கட்சிகள் ஒருங்கிணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என கூறியிருந்தார். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் நிராகரித்திருந்தார்.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தேர்தல் களத்தை அரசியலாகத்தான் பார்க்க வேண்டும். தலித்துகள் மட்டும் இணைந்து கூட்டணி என்பது தனிமைப்படுத்திக் கொள்வதாகும்.
திருச்சியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த தேசம் காப்போம் மாநாடு ஜனவரி மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.