தமிழக காங். பொருளாளராகும் நடிகை குஷ்பு! Exclusive

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் பதவியை பிடிப்பதில் நடிகை குஷ்பு படுதீவிரமாக லாபியில் ஈடுபட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக காங்கிரஸின் தற்போதைய பொருளாளர் நாசே ராமச்சந்திரன். ஈவிகேஎஸ் இளங்கோவனின் தீவிர ஆதரவாளரான இவரை மாற்ற திருநாவுக்கரசர் படாதபாடு பட்டுப் பார்த்தார்.

ஆனால் டெல்லி லாபிகள் வலிமையாக இருப்பதால் நாசேவை திருநாவுக்கரசரால் அசைக்கக் கூட முடியவில்லை. இந்நிலையில் தமிழக பொருளாளர் பதவியை மாற்றலாம் என டெல்லி மேலிடம் முடிவெடுத்துவிட்டதாம்.

இதை தெரிந்து கொண்ட கதர் பிரமுகர்கள் போட்டி போட்டுக் கொண்டு லாபியில் இறங்கியுள்ளனர். இதில் முன்னணி வகிப்பது நடிகை குஷ்புதான்.

ராகுல் அழைப்பை ஏற்று டெல்லி சென்ற இளங்கோவனும் பொருளாளரை மாற்றித்தான் ஆக வேண்டும் என முடிவெடுத்தால் குஷ்புவையே நியமிக்கலாம் என பரிந்துரைத்துள்ளாராம்.

நடிகை குஷ்பு, அந்த பதவியை பெற்றால் காங்கிரசின் முதல் பெண் பொருளாளர் என சரித்திரத்தில் இடம்பிடிப்பார்!

-எழில் பிரதீபன்

More News >>