உள்ளாட்சி அமைப்பு தலைவர்களை மக்களே தேர்வு செய்யும் மசோதா

உள்ளாட்சி அமைப்பு தலைவர்களை மக்களே தேர்வு செய்யும் மசோதாவைத் தாக்கல் செய்தார் அமைச்சர் வேலுமணி.

உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்யும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவையில் கேள்விநேரம் முடிந்ததும், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர்களை மக்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த 2016-ஆம் ஆண்டு மாநகராட்சி மேயரை கவுன்சிலர்கள் தேர்வு செய்யும் முறையை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.

அந்த முறையை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் மசோதா, உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரி, தனி அதிகாரிகள் பதவி காலத்தை நீட்டிப்பது உள்பட 7 சட்ட திருத்த மசோதாக்கள் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டன.

More News >>