3,000 ஊர்களின் ஆங்கிலப் பெயர்கள் விரைவில் தமிழில் மாற்றம்!
தமிழகத்தில் 3,000 ஊர்களின் ஆங்கிலப் பெயர்கள் விரைவில் தமிழில் மாற்றப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
பாரதியாரின் 136-வது பிறந்தநாளை முன்னிட்டு, வானவில் பண்பாட்டு மையத்துடன் இணைந்து தேச பக்தி விழாவை தமிழ் வளர்ச்சித்துறை நடத்தி வருகிறது. இதன் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், அரசு ஆவணங்களில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் பெயர்களை தமிழில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3,000 ஊர்களின் ஆங்கிலப் பெயர்களை தமிழில் மாற்ற ஓரிரு நாட்களில் அரசாணை பிறப்பிக்கப்படும் என்றார்.