கனடாவில் 8,000 மாஜி விடுதலைப் புலிகள் தஞ்சம்... சிங்கள பத்திரிகை திடுக் தகவல்
கனடாவில் 8,000 முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் தஞ்சம் அடைந்துள்ளதாக சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
திவயின வெளியிட்டுள்ள செய்தி:
2,000 விடுதலைப் புலிகளை உள்ளடக்கிய மொத்தம் 8,000 முன்னாள் விடுதலைப் புலிகள் கனடாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். இத்தகவலை முதல் முறையாக கனடா போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பான்மையானோர் தங்களது அடையாளங்களை மறைத்து அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இப்படி தஞ்சம் அடைந்தவர்களில் பலரை ஒப்படைக்கவும் கனடா மறுத்து வருகிறது.
இவ்வாறு திவயின செய்தி வெளியிட்டுள்ளது.