இசையில் மயங்கி கிரிக்கெட் மைதானத்தில் ஆட்டம்போட்ட கோலி ! ரசிகர்கள் உற்சாகம்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின்போது கிரிக்கெட் மைதானத்திலேயே இந்திய அணி கேட்படன் விராட் கோலி நடனமாடியது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக மைதானத்தில் அவ்வபோது பாடல்கள் இசைக்கப்பட்டன.அப்போது இசைக்கு மயங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி அசத்தினார். இதை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 235 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தது. தற்போது, இந்திய அணி விளையாடி வருகிறது.