அதிமுகவில் இணைந்தார் நடிகர் கஞ்சா கருப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு அதிமுகவில் இன்று இணைந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகை கஸ்தூரி உள்ளிட்ட பலர் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது கஞ்சா கருப்பு தம்மை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி இருவரிடையே யார் பெரியவர் என்கிற மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் ஆட்சியைப் போல அதிமுகவிலும் தமது கையே ஓங்கி இருக்கிறது என்பதை எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்தும் வகையில் இன்றைய சந்திப்புகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

 

More News >>