குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வான அடங்கமறு ஸ்நீக் பீக்!

ஜெயம் ரவியின் அடங்கமறு படம் அடுத்த வாரம் டிசம்பர் 21ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில், நாயகி கதாபாத்திரம் குறித்த ஸ்நீக் பிக் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி, ராக்‌ஷி கண்ணா நடித்துள்ள அடங்கமறு திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தை புரமோட் செய்யும் விதமாக ஹீரோ ஜெயம் ரவி, ஹீரோயின் ராஷி கண்ணா மற்றும் இன்ஸ்பெக்டராக வரும் அழகம் பெருமாள் ஆகியோரின் ஸ்நீக் பீக் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், நாயகி ராஷி கண்ணா, அனிதா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது இன்ட்ரோ, ஸ்நீக் பீக்கில், அதிகமான குழந்தைகளுடன் லிஃப்டில் ஏறும் குடும்பத்தை ஜெயம் ரவி நக்கல் அடிப்பது போல் தொடங்கும் காட்சியில், நம்ம நாட்டில் மக்கள் தேவைக்கு அதிகமாக குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர் என்பதை ’ஏ’ ஜோக் காமெடியாக ராஷி கண்ணா சொல்கிறார்.

இந்த ஸ்நீக் பீக்கில் பலரது வாட்ஸப் ஸ்டேட்டசாக மாறி வைரலாகியுள்ளது.

More News >>