இனி சாஃப்ட் பிக்பாஸ் ஷாரிக் இல்லை, உக்ரமான ஹீரோ ஷாரிக்!

பிக்பாஸ் ஷாரிக் உக்ரம் எனும் புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் நடித்த பென்சில் படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷாரிக் ரியாஸ். அதன் பின்னர் இவருக்கு வேறு படங்கள் ஏதும் அமையவில்லை.

இந்நிலையில், விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக ஷாரிக் ரியாஸை அவரது பெற்றோர்கள் களமிறக்கினர்.

ஐஸ்வர்யா தத்தாவுடன் காதல் ஏற்பட்டதாக சொல்லப்பட்ட ஷாரிக் பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், அட்டு படத்தை இயக்கிய ரத்தின லிங்கா இயக்கும் உக்ரம் எனும் புதிய படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் ஷாரிக். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அர்ச்சனா ரவி நடிக்கிறார். இசையமைப்பாளர் சசி இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

 

More News >>