திருப்பூரில் அதிர்ச்சி: ரூ.18 கோடி மோசடி செய்த வங்கி தலைமை மேலாளர் கைது

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.18 கோடி மோசடி செய்த வங்கி தலைமை மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூரை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி பிரியா. இருவரும் ராஜேஷ் கண்ணா என்பவருடன் சேர்ந்து நிறுவனம் ஒன்று தொடங்கவுள்ளதாக கூறி ஆவணங்கள் கொடுத்து ரூ.10 கோடி கடன் பெற்றனர்.

இதன் பிறகு, இந்த ஆவணங்களை கொண்டு மற்ற வங்கிகளிடம் இருந்து கடன் பெற்று தருவதாக வங்கியின் தலைமை மேலாளர் சங்கர் மற்றும் வங்கி ஊழியர் சோமையாஜூலு ஆகியோர் கூட்டு சேர்ந்து சதி திட்டம் தீட்டியுள்ளனர்.

இதுகுறித்து, செந்தில் குமார், பிரியா, ராஜேஷ் கண்ணா ஆகியோருடனும் தெரிவித்துள்ளனர். அவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், போலி ஆணவங்கள் தயாரித்துள்ளனர்.

இந்த ஆவணங்களை பல வங்கிகளில் கொடுத்து மேலும் ரூ.8 கோடி பெற்றுள்ளனர்.இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து, வங்கி ஊழியர் சோமையாஜூலு, வங்கி மேலாளர் சங்கர் உள்பட மோசடியில் ஈடுபட்ட செந்தில்குமார், பிரியா ஆகியோரையும் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>