தாய் நாட்டுக்கு இந்தியர்கள் அனுப்பிய பணம் எத்தனை லட்சம் கோடி தெரியுமா?
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக தாய்நாட்டிற்கு அதிக பணம் அனுப்புவதில் தொடர்ந்து முதல் இடத்தை பிடித்து வருகின்றனர். இந்த ஆண்டும் வெளிநாடுகளிலிருந்து தங்கள் குடும்பங்களுக்கு சுமார் 6 லட்சம் கோடி பணம் அனுப்பியுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
இந்தியாவை தொடர்ந்து இரண்டாவது இடத்தை சீனா பெற்றுள்ளது. அடுத்த இடங்களில் பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, நைஜீரியா நாடுகள் உள்ளன.
தெற்கு ஆசியா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் , வடக்கு ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் வெளிநாடுகளில் வேலை பார்ப்பதன் மூலமாக அந்த நாடுகள் ஏராளமான அன்னியசெலாவனியை பெற்று வருகின்றன. மேலும், ஏராளமானோர் விரும்பி குடியேறும் நாடாக அமெரிக்கா விளங்குகிறது.