கட்டணக் கொள்ளை... பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்!
கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக் கூறி, அதை கண்டிக்கும் நோக்கில் சென்னை அரும்பாக்கத்திலுள்ள தனியார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பெற்றோர்கள் அந்தப் பள்ளியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர்.
அதன்படி, ஒவ்வோர் ஆண்டும் சிறப்பு பயிற்சி வகுப்புகள், பள்ளிச்சீருடை என பல்வேறு வகையில் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.
மேலும், இது தொடர்பாக தனியார் பள்ளி கல்வி கட்டண குழு தலைவரிடம் புகார் அளித்தும் பயனில்லை என்று கூறி வேதனை தெரிவித்தனர்.