தினகரனின் குரு மூக்குப்பொடி சித்தர் சித்தி அடைந்தார்!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரனின் குருவான திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் காலமானார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையே கதியென கிடப்பவர் மூக்குப்பொடி சித்தர். பொதுவாக யாரிடமும் எதுவும் பேசாத இந்த நபர் திடீரென ஒருவரிடம் மூக்குப்பொடி வாங்கி தர கூறுவார்.
அதையே சித்தரின் பாக்யம் கிடைத்ததாக அந்த நபர்கள் கொண்டாடுவர். செல்வந்தர்கள் பலரும் இவரை தங்களுடன் அழைத்து செல்ல் முயன்றும் பலனில்லை.
அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிய நேரத்தில் திடீரென தினகரன், மூக்குப் பொடி சித்தரின் கருணை பார்வைக்காக தவம் கிடந்த படம் சமூக வலைதளங்களில் அப்போது வைரலானது. இந்த மூக்குப்பொடி சித்தர் இன்று காலமானதாக செய்திகள் வெளியாகி உள்ளன.