சிவாஜி பேரனுக்கு பிரியாணி விருந்தளித்த கமல்!
'பிக்பாஸ்' புகழ் சுஜா வருணிக்கும், சிவாஜி பேரனுக்கும் பிரியாணி விருந்தளித்து உபசரித்துள்ளார் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமலஹாசன்.
மக்கள் நீதிமய்யக் கட்சி தலைவர் கமலஹாசன் நடத்திய "பிக்பாஸ்" நிகழ்ச்சியில் பங்கேற்றவர் சுஜா வருணி. சமீபத்தில் சுஜா வருணிக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனாகிய சிவாஜி தேவிற்கும் திருமணம் நடந்தேறியது.
இந்நிலையில் , அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து பிரியாணி விருந்து கொடுத்து உபசரித்துள்ளார் நடிகர் கமலஹாசன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சுஜா வருணி தன் தந்தையின் இழப்பால் பெரும் துயரத்தில் இருந்தார். அப்போது கமலஹாசன் நான் உன் அப்பா ஸ்தானத்தில் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் சுஜா வருணி- சிவாஜி தேவ் தம்பதியினரை தன் வீட்டிற்கு அழைத்து விருந்தளித்ததால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த செய்தியை புகைப்படத்துடன் நடிகை ஸ்ரி ப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.