பிரான்சில் அரசுக்கு எதிரான வன்முறை தொடருகிறது- 575 பேர் கைது!
பிரான்ஸில் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதையடுத்து 575 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் டீசல் வரி உயர்வை எதிர்த்து பாரீஸ் நகரி்ல் கடந்த நவம்பர் 17ம் தேதி மக்கள் கடும் போராட்டத்தில் இறங்கினர். இதன் காரணமாக எரிபொருள் உயர்வை தடுத்து நிறுத்துவதாக அரசு உறுதியளித்தது. அதன் பின்னரும் அரசின் பல கொள்கைகளை எதிர்த்து போராட்டம் வலுப்பெற்றது.
இந்த போராட்டத்தில் 5000பேர் கலந்து கொண்டனர். மேலும், இந்த போராட்டத்தின் விளைவை முன்கூட்டியே உணர்ந்து 8000 போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டம் தொடர்ந்த நிலையில் பாதி வழியில் போலீஸாரால் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தீ வைப்புகள், கடைகளை அடித்து நொறுக்குதல் ஆகிய வன்முறை தாக்குதல்களை போலீஸார் நிகழ்த்தினர்.
மேலும், ஈபிள் டவர் போன்ற சுற்றுலா தல பகுதிகள் மூடிவைக்கப்பட்டிருந்தது. வன்முறை சம்பவத்துக்கு காரணமான 575 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஞ்சள் ஜாக்கெட் என்று அழைக்கப்படும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது.