டிவி விவாதத்தில் பாஜக, சமாஜ்வாதி பிரமுகர்கள் முரட்டுத்தனமாக மோதும் வீடியோ!
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவைச் சேர்ந்த கௌரவ் பாட்டியாவும், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அனுரக் படோரியாவும் ஒருவையொருவர் முரட்டுதனமாக தாக்கி கொண்ட சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக வை சேர்ந்த கௌரவ் பாட்டியாவும், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அனுரக் படோரியாவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தால் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டு ஒருவரையொருவர் முரட்டுத்தனமாக இழுத்து தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பாஜக வை சேர்ந்த பாட்டியா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த படோரியா, பாட்டியாவை இழுத்து பிடித்து தள்ளும் கட்சி பதிவாகியுள்ளது.
மேலும், இவர்களுக்கு இடையேயான மோதல் தீவிரமானதால் போலீஸாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சமாஜ்வாதி கட்சியின் பேச்சாளர் படோரியாவை கைது செய்தது.
இந்த சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.