அதிமுக- அமமுகவை இணைக்க பாஜக முயற்சி: தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு தகவல்
அதிமுகவையும் தங்களது அமமுகவையும் இணைத்து கூட்டணி வைக்க பாஜக முயற்சித்து வருவதாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் தங்க தமிழ்ச்செல்வன் இன்று கூறியதாவது:
அதிமுக, அமமுக இணையாமல் வெல்ல முடியாது என்பதை பாஜக உணர்ந்துள்ளது. அதனால் இரு கட்சிகளையும் இணைக்க முயற்சிக்கிறது பாஜக.
எங்களைப் பொறுத்தவரை அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும். முதல்வர் எடப்பாடி மற்றும் சில அமைச்சர்களை மாற்றினால் மீண்டும் அதிமுகவுடன் இணைய நாங்கள் தயார்.
தமிழகத்துக்கு தேவை புதிய தலைமை. அத்தகைய வெற்றிடத்தை சசிகலா, தினகரனால் மட்டும் தர முடியும். தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 அதிமுகவினரை விடுதலை செய்தது மிகவும் துணிச்சலான முடிவு.
இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.