உடுமலை கெளசல்யா திருமணம் செய்த இளைஞர் ஏகப்பட்ட பெண்களை ஏமாற்றியவரா? பகீர் தகவல்கள்

ஆணவ கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலைப்பேட்டை கெளசல்யா இன்று திருமணம் செய்து கொண்ட கோவை இளைஞர் சக்தி மீது பாலியல் புகார்கள் வரிசை கட்டி வந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் வைரலாக வந்து கொண்டிருக்கிறது.

உடுமலைப்பேட்டையில் ஜாதி ஆணவத்தால் கெளசல்யாவின் காதல் கணவர் சங்கர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அப்போது கெளசல்யாவும் படுகாயமடைந்தார்.

இது தொடர்பான வழக்கில் கெளசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இப்போது கெளசல்யா, கோவையில் நிமிர்வு கலையகத்தை நடத்தி வரும் சக்தி என்ற இளைஞரை திருமணம் செய்துள்ளார்.

இத்திருமணத்தை பெதிக பொதுச்செயலர் கோவை ராமகிருட்டிணன், திவிக தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் இன்று கோவையில் நடத்தி வைத்தனர். இந்நிலையில் பெரியாரிய, தலித்திய வட்டாரங்கள் கெளசல்யா திருமணம் செய்துள்ள சக்தி மீதான பாலியல் புகார்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த பத்திரிகையாளர் கே.என். சிவராமன் இது தொடர்பாக எழுதியுள்ள ஃபேஸ்புக் பதிவு:

இதுவா மறுமணம்? இதையா தமிழக முற்போக்கு சக்திகள் என தங்களை அறிவித்துக் கொண்டவர்கள் நடத்தி வைத்திருக்கிறார்கள்?

ஒரு திருநங்கை உட்பட சுயசாதி விமர்சனத்துடன் சமூக மாற்றத்துக்காக பொது வாழ்க்கைக்கு வந்த நான்கைந்து இளம் பெண்களின் வாழ்க்கையை காதல் என்னும் பெயரில் சீரழித்தது வரை மணமகன் மீதான குற்றப்பத்திரிகை அதிகம்.

அதிலும் ஒரு பெண்ணுடன் மாதக்கணக்கில் வாழ்ந்து அவளது ஆறு மாத கருவை வலுக்கட்டாயமாகக் கலைத்து நடுத்தெருவில் நிறுத்தியவன்.

இவையெல்லாம் அவதூறுகள் அல்ல. தகுந்த ஆதாரங்கள் இருந்தும் நியாயம் கிடைக்காமல் கதறிக் கொண்டிருக்கும் நியாயங்கள். இதே முகநூலில் பலருக்கும் தெரியும். பத்திரிகையாளர்கள் உட்பட.

அவ்வளவு ஏன் அந்த மணமகனை இப்போது சீர்திருத்த மணம் புரிந்திருக்கும் மணமகள் முதல் புரட்சிகரமாக இத்திருமணத்தை நடத்தி வைத்திருக்கும் இயக்கங்களின் தலைவர்கள் வரை அனைவருக்குமே எல்லாமே தெரியும் என்பதுதான் கொடுமை. பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் இவர்களிடமும் நியாயம் கேட்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.

சாதி ஆணவ படுகொலை, நாடகக் காதல் என்பதற்கெல்லாம் விளக்கம் தெரியும்.

நடந்து முடிந்திருக்கும் இத்திருமணத்தையும் எப்படி அழைக்க வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

திருமண செய்தி அறிந்து மகிழ்ச்சியும் மனநிறைவுமாக தொடங்கிய இந்நாள் இப்படி மனக் கொந்தளிப்புடன் முடிந்திருக்க வேண்டியதில்லை...

எழுதியது அவதூறு தவறான தகவல் என நிரூபித்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்

இவ்வாறு கே.என், சிவராமன் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் கெளசல்யா நடத்தி வந்த சங்கர் சமூக நீதி அறக்கட்டளையின் முன்னாள் பொறுப்பாளராக கூறிக் கொள்ளும் ஜெ. ஜீவானந்தம் எழுதியுள்ள பதிவு:

#நிமிர்வு_கலையகத்தின்_ஆசான் என்று கூறிக் கொள்ளும் #சக்தி அவர்கள் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தது...

ஆனால் யாரும் நடந்ததை வெளிப்படையாக கூற முன்வரவில்லை... ஆனால் அப்போது பெண் தோழர் ஒருவர் பறை கற்றுக்கொள்ள சென்ற இடத்தில் தான் தூங்குவதாக நினைத்து தன்னிடம் பாலியல் சீண்டல்களை மூன்று வருடங்களுக்கு முன்பே செய்தார் என்றும்...

அப்போது தனக்கு இந்த வெளி புதிதென்பதால் இதை நம்பிக்கையான ஒருவரிடம் மட்டும் கூறியதாகவும், ஆனால் பல பெண்கள் இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளனர் ... யாரும் பொதுவெளியில் பேச தயாராக இல்லை என்பதால் இப்போது தானே வெளிப்படையாக பேசுவதாகவும் கூறினார்....

அதுமட்டுமின்றி ஒரு திருநங்கையிடமும் தவறாக நடந்து கொண்டதாக ஆதாரமாக கூறினார்... முதலில் அப்போது நடந்ததற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள் என அலசிய #பெண்_விடுதலையில்லையேல்_இம்மண்_விடுதலை_இல்லை என்று கூறும் நிமிர்வு கலையக உறுப்பினர்கள்...

ஒரு வாரம் மழுங்கடித்து பிறகு சக்தியை நிமிர்விலிருந்து கண் துடைப்புக்காக நீக்கினார்.... ஆனால் சக்தியோ குற்றம் சாட்டிய பெண்ணின் நடத்தையை குறித்து பேசி தற்போது மீண்டும் கலையகத்தில் இணைத்துக்கொண்டார்....

#ஒரு_பெண்_தன்_விருப்பத்தோடு_எத்தனை_ஆண்களோடு_வேண்டுமென்றாலும்_இருக்கட்டும்_ஆனால்_அவளின் விருப்பமில்லாமல்_இணையர்_அவளை_தொடுவது_கூட_குற்றமே..... இப்போது நம் #ஜாதி_ஒழிப்பு_போராளி_கௌசல்யா

சக்தியினை உண்மையாக நேசித்த ஒரு முற்போக்கு சிந்தனையுடைய எழுத்தாளர் பெண்ணை அவள் #பாப்பாத்தி_ஆதிக்கத்தை_காட்டியதால் தான் சக்தியை மீட்பதாக கூறினார் இந்த பெண்ணுரிமைவாதி ....

அதுமட்டுமன்றி அனைத்து விடயங்களும் தெரிந்தும் அவர் இனி இப்படி நடந்துகொள்ள மாட்டார் என்று சொல்கிறார் #வாழ்த்துகள்.... ஆனால் அந்த உத்தமர் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு திருந்த வேண்டுமே ஒழிய அந்தப் பெண்ணின் குறைகளை தேடியிருக்கக் கூடாது....

மேலும்.. இதற்கான ஆதாரமாக சம்பந்தப்பட்ட பெண்ணும் திருநங்கையும் கௌசல்யாவும் பேசிய ஆடியோ ஒன்று நிமிர்வு கலையகத்தில் பகிரப்பட்டது....

இது நிமிர்வு உறுப்பினர்களுக்கும் தெரியும்.....

பி.கு:

எது எப்படியோ

இந்த நண்பனாக இருந்தவனின் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் உங்கள் களப்பணிக்கு....

ஆனால் இதற்கு முட்டுக்கொடுக்கும் #போராளீஸ்_பகுத்தறிவாதீஸ் அனைவரும் #சக்தியால்_ஏமாற்றப்பட்ட_பெண்ணுக்கும், #சிதைக்கப்பட்ட_கருவிற்கும்_ பதில் சொல்லாமல் கடந்து செல்கின்றனர்....

#இதுவும்_ஒருவகை_ஆணவக்_கொலையே...

இந்தப் #பெரியாரிஸ்ட்டுகளுக்கும்_தமிழ்தேசியவாதிகளுக்கும் எங்கள் வாழ்த்துகள்.....

இவ்வாறு ஜீவானந்தம் பதிவிட்டுள்ளார்.

இத்தகவல்கள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளுடன் விவாதப் பொருளாகி உள்ளது.

More News >>