உதடை அழகாக்க ஊசி போட்ட இளம்பெண்ணுக்கு ஏற்பட்டதை படியுங்க!
லண்டனை சேர்ந்த ரேச்சல் நாப்பியர்(29) என்ற இளம் பெண் ஒருவர் தன்னுடைய உதடுகளை மேலும் அழகாக்குவதற்கு போட்டக்ஸ் "லிப் ஃபில்லர்" ஊசியை பயன்படுத்தியதால் அவரின் உதடுகள் மூன்று மடங்கு பெரிதாகி ஆபத்தான விளைவை ஏற்படுத்தியது.
லண்டனை சேர்ந்த ரேசல் நாப்பியர் தன்னுடைய தோழியின் வீட்டில் உதடுக்கான ஒப்பனை சிகிச்சைகளில் ஒன்றான "லிப் ஃபில்லர்" ஊசியை பயன்படுத்தியிருக்கிறார்.
முதலில் அந்த ஊசியை உதட்டில் பயன்படுத்தும்போது ரேசல் வலியால் கத்தினார். அதன்பின் இயல்பான நிலையை அடைந்தார். சில மணிநேரங்கள் கழித்து ரேசல் வலியால் கதறினார்.
ரேசலின் உதடுகள் இயல்பான அளவை விட மூன்று மடங்கு பெரிதானது. இதை கண்டு அவர் அச்சத்தில் ஆழ்ந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அந்த லிப் ஃபில்லரை கரைய செய்தனர். 72 மணி நேரங்கள் கழித்து அவரின் உதடுகள் இயல்பான நிலைக்கு திரும்பின.
இதைத் தொடர்ந்து தற்போது ரேச்சல், முறையான மருத்துவர் அல்லாத நபர்களிடம் இதுபோன்ற சிகிச்சைகளை பெற கூடாது என அனைவரையும் எச்சரித்து வருகிறார்.
அதே போன்று செயற்கை முறை ஒப்பனை சிகிச்சைகளால் நன்மையை விட தீமையான விளைவுகள் ஏற்படவே வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.