திமுகவில் டிச.16-ல் இணைகிறார் தினகரன் கோஷ்டி செந்தில் பாலாஜி?
தினகரன் அணியின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவரான செந்தில் பாலாஜி திமுகவில் இணைய போகிறார்; அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளராக செந்தில் பாலாஜியை திமுக அறிவிக்கும் என நாம் தெரிவித்திருந்தோம். தற்போது கருணாநிதி சிலை திறப்பு விழா நாளான டிசம்பர் 16-ல் திமுகவில் செந்தில் பாலாஜி இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
தினகரன் அமமுக கட்சியை தொடங்கிய போதும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் ஒரு பைசாவும் செலவு செய்வதில்லையாம். இதனால் வெறுத்து போயிருந்தனர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள்.
மேலும் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு வேண்டாம் என தினகரன் முடிவெடுத்ததை பலரும் விரும்பவில்லையாம். இதில் முதல் கட்டமாக செந்தில் பாலாஜி, தினகரன் கோஷ்டியிடம் இருந்து விலகிவிட்டார்.
அவர் திமுகவில் சேருவது உறுதி; அரவக்குறிச்சி வேட்பாளராகிறார் என நமது இணையதளம் செய்தி வெளியிட்டது. தற்போது வரும் டிச. 16-ல் சென்னையில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக செந்தில் பாலாஜி திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.