தினகரன் கோஷ்டியில் இருந்து செந்தில் பாலாஜியை தொடர்ந்து ஸ்டாலினின் நெக்ஸ்ட் விக்கெட் பழனியப்பன்?

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுக வளைக்கிறது என நாம் செய்தி வெளியிட்டது முதல் அரசியல் களம் பரபரக்கிறது.

தினகரனைப் பொறுத்தவரையில் ஒரு பைசா செலவு செய்யக் கூடாது என நினைக்கிறார். தம்முடன் வருபவர்கள் செலவு செய்யட்டும் என்பது தினகரனின் எதிர்பார்ப்பு.

இதை கூடுமானவரை சகித்த செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் இனியும் தாங்க முடியாது என எஸ்கேப்பாக தொடங்கிவிட்டனர். திமுகவில் செந்தில் பாலாஜி இணைவது உறுதி என கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜியை தொடர்ந்து அடுத்த விக்கெட்டாக பழனியப்பனை திமுக வளைத்துக் கொண்டிருக்கிறதாம். திமுக சீனியர் ஒருவர்தான் இந்த பேச்சுவார்த்தையை நடத்தி முடித்தி இருக்கிறாராம்

செந்தில் பாலாஜி, பழனியப்பன் என விக்கெட்டுகள் அடுத்தடுத்து சாய்வது தினகரனை களேபரமாக்கியிருக்கிறதாம்

More News >>