கன்னடத்தில் 99ஆக ரீமேக்காகும் 96 திரைப்படம்!
பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான இந்த ஆண்டின் சிறந்த காதல் திரைப்படமான 96 படம், கன்னடத்தில் 99 என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.
விஜய்சேதுபதி, த்ரிஷா கூட்டணியில் காதல் காவியமாக உருவான 96 படம் மாபெரும் வெற்றியையும், ரசிகர்களின் மனதையும் ஆட்சி செய்தது. இந்நிலையில், இந்த படத்தை கன்னடத்தில் படமாக்கவுள்ளனர்.
கன்னட இயக்குநர் பிரிதம் குபி இயக்கத்தில், விஜய்சேதுபதி வேடத்தில் கணேஷ் நடிக்கிறார். நாயகி வேட்டை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தின் தலைப்பை 96 என்பதற்கு மாற்றாக 99 என பெயரிடப் போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
படத்தின் தலைப்பு எண்களை கொண்டு இருப்பதால், கன்னட படம் தனித்து இருப்பதற்காக இயக்குநர் பிரிதம் குபி, இந்த யோசனையை செய்துள்ளார்.
மேலும், இதே 96 திரைப்படம் நானி நடிப்பில் தெலுங்கிலும் ரீமேக் ஆகவுள்ளது. அந்த படத்தில் ஜானுவாக த்ரிஷாவையே மீண்டும் நடிக்க பேச்சுவார்த்தைகளும் நடக்கின்றதாம்.