ஊட்டியில் இருந்து மனைவியுடன் வீடு திரும்பினார் பவர் ஸ்டார்: குழப்பத்தில் போலீசார் !
நடிகர் பவர் ஸ்டார் நேற்று மாலை மனைவியுடன் வீடு திரும்பிய நிலையில், ஊட்டிக்கு சென்றதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் இடையே கேள்வியை எழுப்பி உள்ளது.
சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவரை காணவில்லை என்று அவரது மனைவி ஜூலி கடந்த 6ம் தேதி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். ஜூலி போலீசிடம் புகார் அளித்த நிலையில், பவர் ஸ்டார் கடத்தப்பட்டார் என்று தகவல் பரவியது.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், பவர்ஸ்டார் சீனிவாசன் ஊட்டியில் இருப்பதாகவும், நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக சென்றதாகவும் தெரியவந்தது. ஆனால், பத்திரப்பதிவுக்கு மனைவியின் கையெழுத்தும் வேண்டும் என்பதால் அவரையும் ஊட்டிக்கு அழைத்திருக்கிறாராம் பவர் ஸ்டார்.
ஆனால், புகார் கொடுத்த ஜூலி, பவர் ஸ்டார் ஊட்டியில் தான் இருக்கிறார் என்பதை போலீசிடம் தெரிவிக்காமல் ஊட்டிக்கு சென்றுள்ளார். இதனால், போலீசாரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பவர் ஸ்டார் நேற்று மனைவியுடன் வீட்டிற்கு திரும்பினார். இதனை அவர் போலீசிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், பவர்ஸ்டார் சீனிவாசன் தனது மனைவியிடம் கூறாமல் ஊட்டிக்கு சென்றதும், காணவில்லை என்று புகார் தெரிவித்த அவரது மனைவியே ஊட்டிக்கு சென்றதும் போலீசாரிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.