சீமான் வீட்டில் குவா குவா சத்தம்! - உற்சாகக் கடலில் நாம் தமிழர் தம்பிகள் Exclusive
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்–கயல்விழி திருமணம் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. விரைவில் சீமான் குடும்பத்தில் குவா குவா சத்தம் கேட்க இருக்கிறது என உற்சாகத்தோடு பேசுகின்றனர் நாம் தமிழர் கட்சி தம்பிகள்.
சீமானுக்கும் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் கடந்த 2013 செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழ் முதல் எழுத்தான அ பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை நெடுமாறன் எடுத்து கொடுக்க, அதை சீமான் கயல்விழி கழுத்தில் அணிவித்தார்.
பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். தாலி கட்டுவதற்கு முன் மேடையில் வைக்கப்பட்டு இருந்த பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி அம்மாள், காளிமுத்து, இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்தார் சீமான்.
அப்போது மணமக்களும் நாம் தமிழர் கட்சியினரும் ஈழப் போரில் உயிர் நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உறுதிமொழியும் எடுத்து கொண்டனர். மிகுந்த பொருள்செலவில் இந்தத் திருமணம் நடந்தது.
இந்தத் திருமணத்துக்கு முன்பு வரையில் பேசிய சீமானுக்கும் அதன்பிறகு பேசும் சீமானுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருந்தன. வீரத்தமிழர் முன்னணி என்ற பெயரில் முருகனுக்குக் காவடி எடுத்ததும் சேயோன், மாயோன் என வரிசை கட்டியதும் திருமணத்துக்குப் பிறகுதான்.
கயல்விழியின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கிறார் சீமான் என்ற பேச்சுக்களும் வந்தன. ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை வரத்துக்காகக் காத்திருந்தனர் இந்தத் தம்பதிகள். இன்னும் இரண்டு மாதங்களில் குவா குவா சத்தம் கேட்க இருப்பதால், உற்சாகத்தில் இருக்கிறார் சீமான்.
- அருள் திலீபன்