திமுகவுக்கு சவக்குழி தோண்டி மண் மூடும் சபரீசன்... சாடும் சீனியர் பத்திரிகையாளர்
டெல்லி அரசியலில் ‘மனசாட்சி’ சபரீசனை களமிறக்கிய ஸ்டாலின்- அழகிரி, கனிமொழி அணி ‘கடுகடு’
திமுகவில் டெல்லி அரசியலை கவனிக்க மருமகன் சபரீசனை ஸ்டாலின் களமிறக்கியதால் திமுகவில் சீனியர்கள் புலம்ப தொடங்கிவிட்டனர் என நாம் செய்தி பதிவிட்டிருந்தோம். இப்போது மூத்த பத்திரிகையாளர்கள், திராவிடர் இயக்க ஆர்வலர்கள் பலரும் சபரீசனை களமிறக்கியதை வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.
மூத்த செய்தியாளர்களில் ஒருவர் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
திமுகவுக்கு எதிரிகளால் நாள்தோறும் வெட்டப்படும் சவக்குழியை தோண்டுகிற நிலையிலேயே மூடிவிட திராவிடர் இயக்கப் பற்றாளர்கள் மூன்று கூடை மண் கொட்டினால், ஸ்டாலின் மருமகன் தன் முயற்சியால் ஐந்து கூடை மண்ணை தோண்டி எடுத்து குழியை மேலும் ஆழப்படுத்திவிடுகிறார்.
இவர் இப்போ போட்டோ எடுத்து வெளியிடணும்னு யார் மனு போட்டது. உதயநிதி ஸ்டாலினின் அரசியல் அரங்கேற்றத்தை சமாளிக்கவே முகநூல் திமுகவினர் சிரமப்படும் வேளையில் இது எல்லாம் தேவை தானா?
"ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இப்படி என்றால், ஆட்சிக்கு வந்துவிட்டால் எப்படி பண்ணுவார்கள்" என்று ஏற்கனவே மக்களின் மனதில் சாம்பல் பூத்து இருக்கும் எண்ணத்தை திமுகவே விசிறி விடுவது தான் இதில் சிறப்பு!
இவ்வாறு மூத்த பத்திரிகையாளர் பதிவிட்டுள்ளார்.
மருமகனை மனசாட்சியாக்கும் ஸ்டாலின் - சபரீசனுக்கு ராஜ்யசபா எம்.பி., சீட் ? - EXCLUSIVE