கஜா துயரத்தில் வாடிய மக்களை நெகிழ வைத்த சீமான்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்ட செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

கஜா புயலால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தஞ்சாவூரும் ஒன்று. இங்கு பயிர்கள், தென்னை மரங்கள், வாழை தோப்புகள் என விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இருந்த அனைத்தும் அழிந்தன. இந்த துயரத்தில் இருந்து மீள முடியாத விவசாயிகள் தற்கொலை முடிவுக்கும் தள்ளப்படுகின்றனர்.

இதனால், தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் விவசாயிகளை சந்தித்து உரையாற்றினார்.

இதற்கிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரின் ரசிகர் மன்றத்தினர் அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 3270 பேர் கலந்துக் கொண்டு உணவு சாப்பிட்டனர்.

மேலும், சீமானுக்கும் சாப்பிடுவதற்காக தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சீமான், தானும் மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடித்து சாப்பிட்டார். இந்த காட்சி காண்பவர்களை நெகிழ வைத்தது. அக்கிராம மக்களும் சீமானின் செயலைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

More News >>