புகையை ஊதித்தள்ளும் ஹன்சிகா இதெற்கெல்லாம் எதிர்ப்பு வராதே?

ஹன்சிகா லீடு ரோலில் நடிக்கும் மஹா படத்தில் புகைப் பிடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

மஹா எனும் படத்தின் மூலம் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் ஹன்சிகா நடித்துள்ளார். துப்பாக்கி முனை, 100, மஹா என தற்போது ஹன்சிகா கைவசம் மூன்று படங்கள் உள்ளன.

2018ம் ஆண்டில் பிரபுதேவாவுடன் ஹன்சிகா நடித்த குலேபகாவலி படம் படுதோல்வியை அடைந்தது. அதன் பின்னர் இந்த ஆண்டில் ஹன்சிகாவுக்கு வேறு படங்கள் அமையவில்லை.

இந்நிலையில், அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்கும் மஹா எனும் கிரைம் கலந்த த்ரில்லர் படத்தில் ஹன்சிகா நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

அகோரி வேடத்தில் ஹன்சிகா கஞ்சா புகையை ஊதித் தள்ளும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வைரலாக்கியுள்ளது.

சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி ராமதாஸ், ஹன்சிகாவின் இந்த போஸ்டருக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

More News >>