விஸ்வாசம்...ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் அடிச்சு தூக்கு பாடல் ரிலீஸ்!
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான அடிச்சு தூக்கு பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
சிவா, அஜித் கூட்டணியில் 4வது படமாக உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட மற்றும் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படங்களோடு போட்டியாக ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ரஜினியின் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தற்போது எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி, ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுக்கும் விதமாக இன்று காலை ஒரு அப்டேட் வந்தது.
அதில், மாலை 7 மணிக்கு விஸ்வாசம் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அடிச்சு தூக்கு பாடல் வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியே, ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாடலை டிரெண்டாக்க அஜித் ரசிகர்கள் தொடங்கி விட்டனர்.
தற்போது திருவிழா பாடல் போல் வெளியாகியுள்ள இந்த அடிச்சு தூக்கு பாடலை இசையமைப்பாளர் இமான் பாடியுள்ளார்.
தியேட்டரில் இந்த பாடல் வரும் நேரத்தில் ரசிகர்கள் ஆட்டத்தால் தியேட்டர்கள் அதிரும் என்பதில் சந்தேகமே இல்லை.