ரூ9,000 கோடி வங்கி கடன் மோசடி- விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ரூ9,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் லண்டனுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்திய வங்கிகளில் ரூ9,000 கோடி கடன் வாங்கியிருந்தார் விஜய் மல்லையா. இதை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பி ஓடி லண்டனில் தஞ்சமடைந்தார் விஜய் மல்லையா.
இந்திய வங்கிகளை சூறையாடிவிட்டு போய் வெளிநாடுகளில் உல்லாசமாக வாழ்க்கை வந்து வந்தார் விஜய் மல்லையா. அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டிருந்தது.
மேலும் லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவை நாடு கடத்த கோரி வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.