சர்கார் சர்ச்சை ஏ.ஆர். முருகதாஸ் மீது வழக்குப்பதிவு
சர்கார் படத்தில் அரசின் திட்டங்களை தவறாக சித்தரித்ததால் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார்.
கதை திருட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டைட்டில் காப்பி என பல சிக்கலில் சிக்கிய சர்கார் படம் ஒருவழியாக வெளியானது.
படம் வெளியான பின்னர் தான் பெரிய பூதம் ஒன்று கிளம்பியது. ஒரு விரல் புரட்சி பாடலில், அரசின் இலவச திட்டங்களான மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்களை ஏ.ஆர். முருகதாஸ் தீயிட்டு கொளுத்தும் காட்சி இடம்பெற்றிருந்தது.
அதிமுக அரசின் எதிர்ப்பால் அந்த காட்சி மறு தணிக்கையில் நீக்கப்பட்டது. ஆனாலும், அதிமுகவினர் ஏ.ஆர். முருகதாஸை விடுவது போல தெரியவில்லை.
தற்பொது, மத்திய குற்றப் பிரிவு போலீசார், அரசின் திட்டங்களை தவறாக சித்தரித்ததாக கூறி, ஏ.ஆர். முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனால், எப்போது வேண்டுமானாலும், முருகதாஸ் கைதாக வாய்ப்பு உள்ளது.