சூப்பர் ஸ்னாக்ஸ்.. பலா பழ பணியாரம் ரெசிபி
சூப்பரான மற்றும் சுவையான பலா பழ ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்ப்போம்..
தேவையான பொருட்கள்: கோதுமை மாவு -1கப் ரவை-1/2 கப் வெல்லம்-1கப் உப்பு- சிறிய அளவுபலா பழம்-10சுளைகள் நெய்-தேவையான அளவு
செய்முறை:ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு சேர்த்து, அத்துடன் வெல்லத்தை பொடித்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்.
பின் ரவையை ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு வறுத்து கலந்து வைத்துள்ள கோதுமை மாவு கலவையில் சேர்க்கவும். பலா சுளைகளை விதை நீக்கி மிக்ஸியில் அரைத்து மேற்கூறிய கலவையில் சேர்த்து 15 நிமிடங்கள் தனியே வைக்கவும்.
15 நிமிடங்கள் கழித்து அடுப்பில் பணியார சட்டியை வைத்து நன்கு சூடானதும் நெய் விட்டு மாவை இட்லி மாவு பதத்தில் ஊற்றவும்.
மாவு வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.அவ்ளோதாங்க ருசியான பலா பழ பணியாரம் ரெடி !