யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அடிச்சு தூக்கு பாடல்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள அடிச்சு தூக்கு பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து சிவாவுடன் நான்காவது முறையாக அஜித் விஸ்வாசம் படத்தின் மூலம் கூட்டணி வைத்தார். பொங்கலுக்கு படம் ரிலீசாக உள்ள நிலையில், நேற்று படத்தில் இடம்பெற்றுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிளான அடிச்சு தூக்கு பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

நீண்ட நாட்களாக அப்டேட்டுக்காக காத்திருந்த அஜித் ரசிகர்கள், இந்த பாடலை வைரலாக்க திட்டமிட்டு இருந்தனர். பாடல் வெளியான 13 மணி நேரத்தில் 34 லட்சம் பேர் இந்த பாடலை பார்த்து வைரலாக்கியுள்ளனர். 24 மணி நேரத்திற்குள் 50 லட்சத்தை இந்த லிரிக் வீடியோ கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் பேட்ட பட இசைவெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி பேசிய வீடியோவை சன் டிவி வெளியிட்டு யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. அஜித்தின் விஸ்வாசம் பாடல் எதிர்பார்த்தபடியே பேட்ட இசை வெளியீட்டு விழா வீடியோவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.

விவேகா எழுதியுள்ள இந்த பாடலை இசையமைத்து இமான் பாடியுள்ளார். திருவிழா ஒன்றில் அஜித் ஆடி பாடுவது போல இந்த பாடல் இடம்பெற்றுள்ளது.

More News >>