எதிர்க்கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைக்க வலியுறுத்தினேன்... டெல்லி கூட்டம் பற்றி ஸ்டாலின்

மத்திய பாஜக ஆட்சியை அகற்ற மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தாம் வலியுறுத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் விரிவான பொருளாதார வளர்ச்சி பற்றி பேசினோம். எழுத்துரிமை, பேச்சுரிமை அனைத்தும் மோடி ஆட்சியில் பறிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் பாஜக ஆட்சியாக மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ் ஆட்சியாகவும் நடைபெறுகிறது. மோடி அரசில் 2 ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் ராஜினாமா செய்துவிட்டனர்.

ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் ராஜினாமா செய்கிறார்கள் எனில் ஆட்சியின் நிலையை நாடு நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்டிருக்கக்கூடிய சர்ஜிக்கல் ஸ்டிரைக்காகவே இது இருக்கிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, கட்சி பேதங்களை மறந்து சிறுசிறு பிரச்சினைகள் மனஸ்தாபங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு மத்தியிலே ஒரு பாசிச ஆட்சி மதவெறி பிடித்து இருக்கக்கூடிய ஒரு ஆட்சி மோடி தலைமையில் நடந்து கொண்டிருப்பதை நாம் உணர்ந்து பார்த்து அந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். அதற்காக மெகா கூட்டணி அமைத்து நாம் போராட வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்தியுள்ளேன்,

 

More News >>